⚫🇫🇷😭பிரான்ஸ் அகதிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை!

அகதி ஒருவரின் கால் துண்டிக்கப்பட்ட சம்பவம் ஒன்று பா து கலே நகரில் இடம்பெற்றுள்ளது. சரக்குகள் ஏற்றிச்செல்லும் தொடருந்து ஒன்றில் ஏற முற்பட்ட அகதி ஒருவருக்கே கால் துண்டிக்கப்பட்டுள்ளது. பா து கலேயின் port de Calais இல் இருந்து புறப்பட்ட சரக்கு தொடருந்து ஒன்றில் அகதி ஒருவர் ஏற முற்பட்டுள்ளார். ஆனால் கால் தடுக்கி அவர் தண்டவாளத்தில் விழுந்து தொடருந்துக்குள் சிக்குண்டுள்ளார்.

இதனால் அவரின் கால் ஒன்று துண்டாகியுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா நோக்கி செல்லும் தொடருந்திலேயே அவர் ஏற முற்பட்டுள்ளார் என விசாரனைகளில் தெரிய வந்துள்ளது. கலே நகர காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.