⚫🇫🇷பாரிஸின் Seine-Saint-Denis இல் தொற்று நிலைமை மிக மோசம்! அரசுக்கு மருத்துவர்கள் அழுத்தம்!

பாரிஸின் Seine-Saint-Denis இல்
தொற்று நிலைமை மிக மோசம்
அரசுக்கு மருத்துவர்கள் அழுத்தம்

பிரான்ஸில் கொரோனா வைரஸின் மாறுபாடடைந்த திரிபுகளின் பரவல் மூன்றாவது அலையைத் தோற்றுவித்
துள்ளதாக மதிப்பிடப்படுகிறது.

பாடசாலைகளை மூடுவதையும் உள்ள டக்கிய தேசிய அளவிலான பொது முடக்கம் ஒன்றை அறிவிக்க வேண்டிய
கட்டத்தை நாடு நெருங்குவதாக எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மருத்துவமனைகளின் அவசர பிரிவுக
ளில் சிகிச்சை பெறுபவர்களது எண்ணி க்கை 4ஆயிரத்து 872 ஆக உயர்ந்துள்
ளது. நாட்டில் கடந்த ஆண்டு நவம்பரில் இரண்டாவது பொது முடக்ககம் அறிவிக் கப்பட்டபோது இருந்த அளவை அது தாண்டிவிட்டது.

பாரிஸ் பிராந்தியத்தில் தமிழர்கள் உட்பட வெளிநாட்டு குடியேற்றவாசிகள் பெரும்
பான்மையாக வசிக்கின்ற Seine-Saint- Denis (93)மாவட்டம் நாட்டிலேயே மிக மோசமான வைரஸ் தொற்றுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு நேற்று மாலை தொற்று வீதம் (Incidnce) 790 என்ற அளவை எட்டி உள்ளது.

இங்குள்ள பொண்டி(Bondy) நகரத்தில் சனத் தொகையில் ஒரு வீதத்தினர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ள னர் என்று நகரின் மேயர் தெரிவித்துள் ளார்.

நாடளாவிய ரீதியில் விரைந்து காத்திர மான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாரிஸ் பிராந்தியத்தைச் சேர்ந்த மருத்து வமனைகளின் நெருக்கடிகால சேவைக
ளுக்குப் பொறுப்பான பணிப்பாளர்கள் 41 பேர் அரசுத் தலைமையிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தேசிய அளவில் மூன்றாவது பொது முடக்கம் ஒன்றை இனிமேல் அறிவிப்ப தில்லை என்று கடந்த ஜனவரியில் எடுத்த தனது முடிவில் அரசுத்தலைவர் மக்ரோன் உறுதியாக இருந்துவருகிறார்.

19 மாவட்டங்களில் தற்சமயம் அமுல் செய்யப்பட்டுவருகின்ற மிகத் தளர்வான
கட்டுப்பாடுகள் தொற்றைத் தடுக்கப் போதுமானவை அல்ல என்று மருத்து வர்களும் தொற்றுநோயியலாளர்களும் கூறிவருகின்றனர்.

பாடசாலைகளிலும் மாணவர்களிடையே
தொற்றுக்கள் அதிகரித்துள்ளன. சுகா
தார நிலைவரத்தை ஆராய்வதற்காக
பாதுகாப்புச் சபை வரும் புதன்கிழமை
கூட உள்ளது. அடுத்து எடுக்க வேண்டிய
நடவடிக்கைகள் அந்ததக் கூட்டத்தில்
தீர்மானிக்கப்படும் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.