⚫🇫🇷பிரான்ஸ் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

பிற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிரான்சில் சட்டவிரோத குடியேற்றங்கள் மிக குறைவாகவே உள்ளது என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் Gérald Darmanin மேலும் தெரிவிக்கையில், “பிற பெரும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், பிரான்சில் ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக வசிப்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவே.

உதாரணத்துக்கு பிரித்தானியாவில் 1,5 மில்லியன் பேர் அவ்வாறு இருக்கையில் பிரான்சில் 600,000 இல் இருந்து 700,000 பேர் மாத்திரமே ஆவணங்களற்று வசிக்கின்றனர்!” என Gérald Darmanin தெரிவித்தார். அதேவேளை, இந்த ஆவணங்களற்றவர்களின் எண்ணிக்கை ஒரே வருடத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வெளியிடப்பட்ட தரவுகளின் படி பிரான்சில் 382,899 பேர் ஆவணங்களற்று வசிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.