⚫🇫🇷பிரான்ஸில் தொலைபேசி இல்லாமல் சுகாதார அனுமதி சிட்டையை பயன்படுத்துவது எப்படி?

வரும் ஜூன் 9 ஆம் திகதியில் இருந்து ‘சுகாதார அனுமதி சிட்டை’ (pass sanitaire) பயன்பாட்டுக்கு வருகின்றது. நாடு முழுவதும் இடம்பெறும் மிகப்பெரிய நிகழ்வுகளில் (உதைபந்தாட்ட மைதானம், இசை நிகழ்ச்சிகள் போன்றன) கலந்துகொள்ள உங்களுக்கு கட்டாயம் pass sanitaire தேவைப்படுகின்றது. TousAntiCovid தொலைபேசி செயலி ( App) மூலம் இந்த pass sanitaire இனை பயன்படுத்தலாம். நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்ட விபரங்கள் இந்த தொலைபேசி செயலியில் பதிவேற்றப்பட்டிருக்கும். தேவைப்படும் இடங்களில், உங்கள் TousAntiCovid செயலியில் உள்ள QR Code இனை ஸ்கேன் செய்தால் போதும். இலகுவாக உங்களுக்கு அனுமதி கிடைத்துவிடும். தொலைபேசி இல்லாதவர்கள் என்ன செய்ய வேண்டும்.?

http://www.attestation-vaccin.ameli.fr/

எனும் இணையத்தளத்திற்கு சென்று உங்கள் தடுப்பூசி தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளலாம். அங்கு உங்கள் விபரங்கள் அடங்கிய ஒரு QR code இனை தரவிறக்கம் (Download) செய்துகொள்ள முடியும். பின்னர் அதனை நீங்கள் ஒரு தாளில் பிரிண்ட் செய்து கைகளில் வைத்துக்கொண்டால் போதும்.

நீங்கள் செல்லும் இடம்மெல்லாம் இந்த தாளினை கொண்டு சென்றால் போதும். அது pass sanitaire ஆக கருதப்படும்.