🔴🇫🇷விசேட செய்தி! பிரான்ஸ் அரசு வெளியிட்ட புதிய அனுமதி பத்திரம் செல்லாது!

இன்று காலை அரசு வெளியிட்ட பயண அனுமதி பத்திரம் உடனடியாகவே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. நேற்று நள்ளிரவு முதல் 16 மாவட்டங்களில் முழு உள்ளிருப்பு அறிவிக்கப்பட்டது. அரசு இறுதி நேரத்திலேயே இந்த முடிவினை எட்டியிருந்தது. இதானால் அனுமதி பத்திரத்தை தயாரிக்க போதிய அவகாசம் அரசிடம் இருக்கவில்லை.

வெள்ளிக்கிழமை இரவு (நேற்று) அனுமதி பத்திரம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அன்றைய தினம் வெளியிடப்படவில்லை. பின்னர், இன்று சனிக்கிழமை காலை ஒரு பயண அனுமதி பத்திரம் வெளியிடப்பட்டது. ஆனால் அதில் மிக குழப்பமான தரவுகள் இருந்துள்ளது. அதில் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு 15 காரணங்களும், அதிகபட்ச பயண தூரம் 30 கி.மீற்றர்களுமாக இருந்தது. இதனால் அந்த பயண அட்டை உடனடியாகவே விமர்சனத்துக்கு உள்ளானது. இந்நிலையில், இன்னும் சில மணிநேரங்களில் இலகுபடுத்தப்பட்ட புதிய பயண அனுமதி பத்திரம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.