⚫🇫🇷பிரான்ஸில் அதிகரிக்கப்பட்ட குற்றப்பணம்! போலி சுகாதார அனுமதி அட்டைக்கு ஆப்பு!

போலி சுகாதார அனுமதி அட்டைகளுக்கு (pass sanitaire) அறவிடப்படும் குற்றப்பணம் அதிகரிக்கப்பட உள்ளது.
போலி சுகாதார அட்டைகள் வைத்திருப்போருக்கு தற்போது €135 யூரோக்கள் குற்றப்பணம் அறவிடப்படுகின்றது.

விரைவில் இந்த தொகை €1,000 யூரோக்களாக அதிகரிக்கப்பட உள்ளது. வரும் டிசம்பர் 27 ஆம் திகதி இடம்பெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. மேலும், போலி சுகாதார அனுமதி அட்டைகளை விற்பனை செய்வோருக்கு எதிராகவும் தண்டனைகள் அதிகரிக்கப்பட உள்ளன.

தற்போது போலி சுகாதார அனுமதி அட்டைகள் விற்பனை செய்வோருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், €75,000 யூரோ குற்றப்பணமும் அறவிடப்படுகின்றது. இந்தத் தொகையை இரண்டு மடங்காக அதிகரிக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட உள்ளதாக அறிய முடிகிறது.