🇫🇷😲பிரான்ஸில் நான்காவது தொற்றலை வந்துவிட்டது! வெளியான பரபரப்பு தகவல்!

கொரோனாவின் நான்காம் தொற்று அலை ஏற்கனவே பிரான்சை தாக்க ஆரம்பித்து விட்டதாக அரச பேச்சாளர் சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை வாசித்த அரச பேச்சாளர் Gabriel Attel, இதனை குறிப்பிட்டார். 11 மாகாணங்களில் கொரோனா மீண்டும் வேகமெடுக்க ஆரம்பித்துள்ளது. ‘நான்காம் தொற்று அலை ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது!’ என தெரிவித்தார். இல் து பிரான்சுக்குள் தொற்று வீதம் 30% ஐ நெருங்கிவிட்டது. அடுத்தடுத்த வாரங்கள் மிக மிக முக்கியமான நாட்கள் எனவும் அரச பேச்சாளர் தெரிவித்துள்ளார்.