இராணுவ வீரர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி வீதியில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். Lyon மாவட்டத்தின் 6 ஆம் வட்டாரத்தில் உள்ள Boulevard des Belges வீதியில் கிடந்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9.45 மணிக்கு பேரூந்து சாரதி ஒருவர்
குறித்த வீரரை கண்டுள்ளார். சாதாரண உடை அணிந்திருந்த அவர் கத்திக்குத்துக்கு இலக்காகி மயங்கி கிடந்த நிலையில் கிடப்பதை பார்த்து, காவல்துறையினரை அழைத்துள்ளார்.
விரைந்து வந்த காவல்துறையினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை சோதனையிட்டபோது அவர் ஒரு இராணுவ வீரர் என தெரியவந்துள்ளது. ஆனால் அவரை தாக்கியவர்கள் குறித்த எந்த தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. காயமடைந்த வீரர் 33 வயதுடையவர் எனவும், அவரின் உயிருக்கு ஆபத்துக்கள் எதுவும் இல்லை என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!