🇫🇷பிரான்ஸில் மீண்டும் ஆரம்பித்த போராட்டம்! வெளியான முக்கிய தகவல்!

பொதுப் பாதுகாப்புச் சட்டத்திற்கு (Loi Sécurité globale) எதிரான போராட்டம் இன்று மீண்டும் பிரான்ஸ் முழுவதும் ஆரம்பித்துள்ளது. பரிஸ், போர்தோ, லில், ரென், நோந்த் போன்ற பெருநகரங்களிலும், மேலும் பல இடங்களிலும் இந்தப் போராட்டம், இன்று 14h00 மணிக்கு ஆரம்பித்து இருந்தது. எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும், «சுதந்திரத்ததைக் காக்கும்» போராட்டத்தை நாம் செய்வோம் என கடந்த நவம்பர் மாதத்திலிருந்து போராட்டத்தை ஒழுங்கமைப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

பரிசில் place Daumesnil இலிருந்து புறப்பட்ட போராட்ட அணி Bastille நோக்கிச் சென்றுள்ளது. நாடு தழுவிய ரீதியில் 80 இற்கு மேற்பட்ட போராட்டங்கள், இன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனத் தொற்று அதிகரித்துள்ள இந்நிலையில் இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து ஆபத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, எந்த வன்முறைகளும் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படவில்லை. இந்தப் போராட்டங்கள் ஊரடங்கிற்கு முன்னதாகவே முடிவடைந்துள்ளன.