⚫🇫🇷பிரான்ஸ் ஆர்ப்பாட்டமும், வன்முறைகளும்! வெளியான முக்கிய தகவல்!

இன்று சனிக்கிழமை பரிஸ் உட்பட நாடு முழுவதும் 175,000 பேருக்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ச்சியான ஆறாவது வாரமாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

சுகாதார பாஸ் நடைமுறைக்கு எதிராக இடம்பெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இன்றைய தினம் 175,503 பேர் கலந்துகொண்டனர். கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இது கணிசமான வீழ்ச்சியாகும். கடந்தவார சனிக்கிழமை 214,845 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தலைநகர் பரிசில் 14.700 ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். ஆங்காங்கே காவல்துறைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதலும் வெடித்தது. நாடு முழுவதும் இன்று 20 பேர் கைதாகியுள்ளனர்.