⚫🇫🇷பிரான்ஸில் மீண்டும் பாரிய ஆர்ப்பாட்டம்!

சுகாதார அனுமதிப்பத்திரத்திற்கு எதிரான Anti-pass sanitaire ஆர்ப்பாட்டங்கள் ஐந்தாவது வாரமாக நாளை சனிக்கிழமையும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று ஆர்ப்பாட்டங்கள் தலைநகர் பரிசிலும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இந்த ஆர்ப்பாட்டத்தின் தீவிர வலதுசாரி ஒருங்கிணைப்பாளர் Florian Philippot தெரிவித்துள்ளார்.


இந்த ஆர்ப்பாட்டங்கள் நாளை பரிசின் முக்கிய மூன்று புள்ளிகளில் 13h00 இலிருந்து ஆரம்பிக்க உள்ளது. பிரான்ஸ் முழுவதும் பல நகரங்களிவும் இதே நேரம் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற உள்ளன. இதில் தீவிர வலதுசாரிகளுடன், மஞ்சள் மேலாடைப் பேராளிகளும் கலந்து கொள்கின்றனர்.