⚫🇫🇷பிரான்ஸ் மக்களின் பொறுப்பின்மை! இரண்டு மடங்கான கொரோனா தொற்று!

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றூ இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. முழுமையான விபரங்கள் இதோ. 8,875 பேருக்கு கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய நாளை விட இந்த தொற்று எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்வடைந்துள்ளது. தொற்று வீதம் 1.3% வீதமாக உயர்வடைந்துள்ளது.

இதுவரை 5,829,724 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தீவிர சிகிச்ச்சைப் பிரிவு தொடர்ந்தும் 1000 இற்கும் குறைவானவர்களே உள்ளனர். 931 பேர் தீவிர சிகிச்ச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வர, சாதாரண சிகிச்சையில் 7.076 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 6 பேர் சாவடைந்துள்ளனர். மொத்த சாவு எண்னிக்கை 111.442 பேராக அதிகரித்துள்ளது.