♦️🇫🇷😳பிரான்ஸ் ஆயுததாரிகளின் வெறிச்செயல்!

நண்பர்கள் இருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் சாவடைந்துள்ளார். இரண்டாமவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் Ivry-sur-Seine, (Val-de-Marne) நகரில் இடம்பெற்றுள்ளது. மகிழுந்து ஒன்றிலும், ஸ்கூட்டர் வகை மோட்டார் சைக்கிளிலும் வந்திருந்த இரு ஆயுததாரிகள், வீதியில் நடந்து சென்ற இரு நண்பர்கள் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் 21 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளனர். மற்றைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு தொடர்பான விசாரணைகள் Val-de-Marne மாவட்ட அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.