🇫🇷சற்று முன்! பாரிஸில் பெண்களை பணயக்கைதிகளாக சிறை பிடித்த ஆயுததாரி! Video

பரிசில் ஆயுததாரி ஒருவன் இரு பெண்களை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளான். 12 ஆம் வட்டாரத்தின் rue d’Aligre வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆயுததாரி ஒருவன் இரு பெண்களை பணையக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளான். சம்பவ இடத்துக்கு BRI அதிகாரிள் குவிக்கப்படுள்ளனர். குறித்த பகுதிக்குள் பொதுமக்கள் யாரும் நுழையவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பாதுகாப்பு வலையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆயுததாரி கைகளில் கத்தி வைத்துள்ளதாகவும், பயங்கரவாத நடவடிக்கை எதுவும் இதில் இல்லை எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, ஆயுததாரி மனநலம் பாதிக்கப்பட்டவன் எனவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. BRI அதிகாரிகள் ஆயுதாரியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக அறிய முடிகிறது.