🇫🇷பிரான்ஸ் சுகாதார அவசரகால நிலைமை!😭 வெளிவந்த முக்கிய தகவல்!😳

கொரோனாத் தொற்று ஆரம்பித்த காலத்தில் நடைமுறையில் இருந்த சுகாதார அவசரகால நிலைப் பிரகடணடானது (état d’urgence sanitaire), முதற் தொற்றலையின் முடிவில் நீக்கப்பட்டது. இது மீண்டும் இரண்டாவது தொற்றலையால் நவம்பர் மாதம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

முதற்கட்டப் பிரகடணம் முடிவிற்கு வரவுள்ள நிலையில், அவசரகால நிலைப் பிரகடணத்தை எதிர்வரும் ஜுன்மாதம் வரை நீட்டிக்க, பிரதமரும், சுகாதார அமைச்சரும் முடிவெடுத்துள்ளனர். இதனை நீட்டிப்பதற்கான வாக்கெடுப்பும் விவாதமும், எதிர்வரும் 18ம் திகதி பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட உள்ளது.

இரண்டாம் கட்டமாக இது, எதிர்வரும் 25ம் திகதி, இது செனட் சபையிலும் விவாதிக்கப்பட உள்ளது. அதன் பின்னரே இந்த அவசரகால நிலைப் பிரகடண நீட்டிப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.