பிரான்ஸில் மிதக்கும் பேருந்து! இனி ஜாலி தான்! Video

சுற்றுலாப்பேருந்து ஒன்றில் பயணிக்கும் நீங்கள், திடீரென பேருந்து சென் நதிக்குள் பாய்வதை கண்டால் எப்படி இருக்கும்..? இந்த ‘திகில்’ அனுபவம் தற்போது பரிஸ் மக்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. பிரான்சில் முதன் முறையாக இந்த அனுபவம் தலைநகர் பரிசில் கொண்டுவரப்பட்டுள்ளது. 35 இருக்கைகள் கொண்ட இந்த நீல நிற பேருந்தினை Les Canards de Paris நிறுவனம் வடிவமைத்துள்ளது. Champ-de-Mars அருகே தரித்து நிற்கும் இந்த பேருந்து பார்ப்பதற்கு சாதாரண பேருந்து போல் தான் இருக்கும்.

சுற்றுலாப்பயணிகளை வரவேற்கும் பேருந்து சாரதி, அனைவரையும் ஏற்றி பாதுகாப்பாக அமர வைத்ததும் பேருந்து புறப்படும். pont Alexandre III, Grand Palais, l’Arc-de-Triomphe போன்ற இடங்களுக்கு பயணித்து அப்படியே Boulogne-Billancourt பகுதி நோக்கிச் செல்லும்.

பின்னர் பேருந்து nautique de Sèvres (Hauts-de-Seine) பகுதிக்குச் சென்றடையும். இப்போது பேருந்து வீதியை விட்டு விலகி… சென் நதிக்குள் பேருந்து பாயும். அதுவரை பேருந்தில் நிதானமாக பயணித்த நீங்கள், இப்போது சென் நதியில் மிதக்க ஆரம்பித்து விடுவீர்கள். சென் நதியில் சுற்றியடித்துவிட்டு, மீண்டும் வீதியில் ஏறி உங்கள் பழைய தரிப்பிடம் நோக்கி பயணிக்கும். இந்த கோடை காலத்தில் நீங்கள் அனுபவிக்க மிகச்சிறந்த அனுபவமாக இது இருக்கும். முன்பதிவுகள் மிக வேகமாக இடம்பெறுவதால், குறைந்தது ஒரு வாரத்துக்குப் பின்னரே உங்களுக்காக திகதி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

https://mobile.twitter.com/francebleuparis?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1426785730538270724%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.paristamil.com%2Ftamilnews%2Ffrancenews-MTk3NTIwOTg3Ng%3D%3D.htm