🔴🇫🇷🦠பிரான்ஸில் மீண்டும் அதிகரித்த கொரோனா தொற்று! இன்றைய நிலவரம்! 21.03.2021

இன்று ஞாயிற்றுக்கிழமை (21.03.2021) பிரான்சில் 138 பேர் கொரேனாவினால் சாவடைந்துள்ளனர். இதனால் வைத்தியசாலைகளில் சாவடைந்தவர்களின் எண்ணிக்கையானது 66.873 ஆக அதிகரித்துள்ளது. பிரான்சில் கொரோனாவினால் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 92.299 ஆக உயர்ந்துள்ளது.

வைத்தியசாலைகள் அனைத்தும் பெரும் அழுத்தத்தில் உள்ளன. நவம்பர் மாதம் பிரான்சினைக் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தாக்கியபோது இருந்ததை விட, வைத்தியசாலைகளில் கொரேனாத் தொற்று நோயாளிகள் அதிகரித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை 35.000 பேரிற்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை 35.088 பேரிற்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் கிட்டத்தட்ட 26.000 நோயாளிகள் (25.926) அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாளாந்தம் தொடர்ச்சியாக அதிகரித்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிராபத்தான நிலையில் 4.406 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்சின் 84.8% தீவிர சிகிச்சைப்பிரிவுகள் நிரம்பி பெரும் அழுத்தத்தை உருவாக்கி உள்ளது.
பிரான்சின் தொற்று வீதமானது 100.000 பேரிற்கு 277.61 என்ற நிலையில் உச்சமடைந்துள்ளது.

இந்த நிலையில் மக்களை உள்ளிருப்பிற்குள் அடைக்க முடியாது என்று ஜனாதிபதி அரசியல் செய்து வருகின்றார்.