🔴🇫🇷🦠பிரான்ஸ் கொரோனா நிலவரம்! தொற்று மற்றும் இறப்பு!

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வெளியிடப்பட்டுள்ள தொற்று மற்றும் சாவு விபரங்கள் இதோ; மார்ச் 18 ஆம் திகதி வியாழக்கிழமை மாலை வெளியிட்டப்பட்ட தரவுகளின் படி, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 34.998 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரான்சில் இதுவரை 4,181,607 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை 7.5 ஆக இருந்த தொற்று வீதம் நேற்று வியாழக்கிழமை 7.7 வீதமாக அதிகரித்துள்ளது.

25,389 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். (புதன்கிழமை 25,314 பேராக இருந்தது) இவர்களில் 4,246 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 382 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 274 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர். இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 91.706 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் மருத்துவமனைகளில் 66.301 பேர் சாவடைந்துள்ளனர்.