அடுத்தகட்ட உள்ளிருப்பு நீக்கத்திற்கும் அனைத்து வர்த்தக நிலையங்களின் மீள் திறப்பிற்கும் 24 மணிநேரம் மட்டுமே இருக்கையில், பிரான்சில் கொரோனாத் தொற்று மிகக் கணிசமாகக் குறைந்துள்ளது எனப் பொதுமக்கள் சகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தொற்று விகிதமானது 100.000 பேரிற்கு 142 ஆகத் தேசிய அளவில் குறைந்துள்ளது.
இது ஏப்ரல் மாதத்தில் 400 இனைத் தாண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வைத்தியசாலைகளில் 23.000 இற்குக் கீழாகத் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்து, 4.190 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர். ஆனாலும் இல்-து-பிரான்சிலும், Hauts-de-France இலும் 100% அவசரசிக்சிச்சைப் பிரிவுகள் நிரம்பி உள்ளன. பிரான்சில் இதுவரை 107.850 பேர் கொரோனாவால் சாவடைந்துள்ளனர். அதேநேரம், நான்கு நாட்கள் அரச விடுமுறையும் வாரஇறுதியும் வந்த நிலையில், கொரோனாப் பரசோதனைகள் மிகக் குறைந்த அளிவிலேயே செய்யப்பட்டன என்பதும் தொற்று வீதம் குறைவாகக் காட்டப்படுவதற்கான காரணம் எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.
- ⚫🇫🇷பிரான்ஸில் மூன்று மாதத்தில் மூன்றாவது தடுப்பூசி! வெளியான அறிவிப்பு!
- ⚫🇫🇷செம்மஞ்சள் எச்சரிக்கையில் ile-de-France!
- ⚫🇫🇷பிரான்ஸ் சுகாதார அமைச்சரின் புதிய திட்டம்! ஜனவரி முதல் ஆரம்பம்!
- ⚫இலங்கையின் ஹோட்டலில் மாணவனுடன் தங்கிய மாணவி! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
- ⚫இலங்கையில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு! 3000 கோழிகள் தீக்கிரை!