🔴😳🇫🇷பிரான்ஸில் அதிகரித்துள்ள கொரோனா மரணங்கள்!

திங்கட்கிழமைகளில் தரவுகள் முழுமையாகப் பெறப்படாத நிலையிலும்,
கடந்த 24 மணிநேரத்திற்குள் பிரான்சில் கொரோனாவால் மீண்டும் 126 பேர் மட்டுமே சாவடைந்துள்ளனர். இதனால் பிரான்சில் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 109.528 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்திற்குள் தரவுகள் முழுமையாகப் பெறப்படாத நிலையில் 1.211 பேரிற்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றாளரர்களின் எண்ணிக்கை 5.667.324 ஆக உயர்ந்துள்ளது.


வைத்தியசாலைகளில் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 83.116 (+126) ஆக அதிகரித்துள்ளது. முதியோர் இல்லங்களில் 26.412 பேர் சாவடைந்துள்ளனர். 16.596 பேர் கொரோனாவால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிரசிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.945ஆக குறைவடைந்துள்ளது.
இதில் இல்-து-பிரான்சில் மட்டுமே 859 பேர் தீவிரசிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.