⚫🇫🇷பிரான்ஸில் புதிய கொரோனா தடுப்பூசி சோதனை! அதிரடி அறிவிப்பு!

பிரெஞ்சு மற்றும் ஓஸ்த்ரிய மருந்தாய்வு நிறுவனமான வல்னெவா (Valneva) நிறுவனத்தின் கொரோனாத் தடுப்பு ஊசிகளின் பரீட்சார்த்தச் சோதனைகள் மிகவும் வெற்றிகரமான பெறுபேறுகளை வழங்கி உள்ளது.

இதன் கொரோனாத் தடுப்பு வீரியம் 80% பாதுகாப்பை உறுதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவினை வல்னெவாவின் தலைமை இயக்குநர் பிரோங் கிரிமோ (Franck Grimaud) வழங்கி உள்ளார். வீரியமிழக்க வைக்கப்பட்ட கொரோனா வைரசினை உபயோகித்து ARN ரகக் கொரோனத் தடுப்பு ஊசியாகவே வல்னொவா தடுப்பு ஊசிகள் உருவாக்கப்பட்டுள்ளன.


வருடாந்தத் தடிமன் காய்ச்லிற்கு எதிரான தடுப்பு ஊசிகளும் (vaccins contre la grippe) இதே தொழில் நுட்பத்தினையே பயன்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.
மிக விரைவில் வல்னெவா கொரோனாத் தடுப்பு ஊசிகள் பாவனைக்கு வரும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.