⚫🇫🇷பிரான்ஸில் 24 மணிநேரத்தில் உச்சக்கட்ட தொற்று! கோடை காலத்தின் பின் மீண்டும் உச்சம்!

கடந்த 24 மணிநேரத்தில் 30, 000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார். ஐந்தாம் தொற்று அலை ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. பாராளுமன்றத்தில் வைத்து, இன்று செவ்வாய்க்கிழமை சுகாதார அமைச்சர் Olivier Véran இதனை தெரிவித்துள்ளார்.

‘கடந்த 24 மணிநேரத்தில் 30,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோடை காலத்தின் பின்னர் இதுபோன்ற அதிகளவான தொற்று தற்போது பதிவாகியுள்ளது.’ என தெரிவித்திருந்தார். முன்னதாக ஓகஸ்ட் 11 ஆம் திகதி, 30,920 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தது. “இது ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். ஐந்தாவது தொற்று அலையில் நாம் இருக்கின்றோம்!. ஆறு மில்லியன் பேர் இதுவரை எந்த ஒரு தடுப்பூசியினையும் போட்டுக்கொள்ளாமல் உள்ளனர். இது மிகவும் அதிகமானது.

‘நான் காத்திருக்கின்றேன் என்பதையும், நேரம் இல்லை என்பதையும்’ சொல்லுவதை விடுத்து உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்!” என சுகாதார அமைச்சர் Olivier Véran தெரிவித்தார். Santé Publique France வெளியிட்ட முழுமையான கொரோனா தொற்று விபரங்கள் இன்னும் சில நிமிடங்களில் வெளியாகும்.