♦️🇫🇷பிரான்ஸின் இன்றைய கொரோனா நிலவரம்!

தொடர்ச்சியாகக் கொரோனாத் தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அன்றாடம் குறைந்துவரும் நிலையில், கடந்த 24 மணிநேரத்திற்குள் பிரான்சில் கொரோனாவால் மீண்டும் 96 பேர் மட்டுமே சாவடைந்துள்ளனர். இதனால் பிரான்சில் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 109.758 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்திற்குள் 8.743 பேரிற்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தொற்றாளரர்களின் எண்ணிக்கை 5.685.915 ஆக உயர்ந்துள்ளது.
வைத்தியசாலைகளில் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 83.339 (+96) ஆக அதிகரித்துள்ளது. முதியோர் இல்லங்களில் 26.412 பேர் சாவடைந்துள்ளனர். 15.638பேர் கொரோனாவால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிரசிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.754ஆக குறைவடைந்துள்ளது. இதில் இல்-து-பிரான்சில் மட்டுமே 805 பேர் தீவிரசிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.