🔴🇫🇷பிரான்ஸில் கொரோனா நிலமை சாதகமாகவுள்ளது!

நாட்டின் கொரோனா நிலைமையும் அன்றாடத் தொற்றுக்களும் மிகவும் சாதகமாகவே உள்ளதாக, பிரான்சின் சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார். இன்று பரிஸ் Roland-Garros இற்குச் சென்றிருந்த அமைச்சர், முதலாவது சுகாதாரச் சான்றிதழ் (pass sanitaire) செயல் முறையைத் தொடக்கி வைத்த போது மேற்கண்ட தகவலைத் தெரிவித்திருந்தார். அன்றாடம் கொரோனத் தொற்று எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது. ஒவ்வொரு வாரமும் கிட்டத்தட்ட 40சதவீதம் குறைவடைந்து வருகின்றன. தற்போது சராசரியக நாளாந்தம் 6.000 தொற்றுக்கள் உறுதி செய்ய்படுகின்றன.

நாட்டின் கொரோனாத் தொற்று விகிதமானது 100.000 பேரிற்கு 70 பேர் எனக் குறைவடைந்துள்ளது. கடந்த வாரம் எச்சரிக்கப்பட்ட பிரான்சின் தெற்குப் பகுதிகளிலும் தொற்று வீழச்சியடைந்துள்ளது. கடந்த கோடைகாலத்திலிருந்து இத்தகைய வீழ்ச்சியை இப்பொழுது தான் அடைந்துள்ளோம். வைத்தியசாலைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் தற்போது வெகுவாகக் குறைந்துள்ளது.
இதற்கு விரைவான கொரோனத் தடுப்பு ஊசிகள் போடப்படுவதே காரணமாக அமைந்துள்ளது. என சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டிற்கான அமைச்சர், பரிஸ் ரோலண்ட் கரோசில் ஊடகவியலாளர்களிற்குச் செவ்வியளிக்கையில் தெரிவித்துள்ளார்.