⚫🇫🇷பிரான்ஸில் மீண்டும் அதிகரித்து செல்லும் கொரோனா பரிசோதனைகள்!

பிரான்சில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது கணிசமாக அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் பிரான்சில் 6.2 மில்லியன் பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

டிசம்பர் 13 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதி வரையான 7 நாட்களில் இந்தப் பெரும் எண்ணிக்கையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த பரிசோதனைகளில் 50 வீதமானோர் 25 வயதுக்கு உட்பட்ட இளையவர்கள் ஆவர். அதேவேளை, 26 வயது தொடக்கம் 40 வயதுக்குட்பட்டவர்களுக்கான கொரோனா பரிசோதனைகளும் அதிகரித்துள்ளன.

மேற்படி பரிசோதனைகளில் PCR, Antigen மற்றும் உமிழ்நீர் மூலமான பரிசோதனைகளும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.