🔴🇫🇷பிரான்ஸின் இன்றைய கொரோனா நிலவரம்!

இன்று பிரான்ஸ் பெரிய உள்ளிருப்பபு வெளியேற்றத்திற்குள்ளாகி உள்ளது. தொடர்ந்தும் கொரோனத் தொற்றாளர்களின் வீழ்ச்சியும், வைத்தியசாலைகளில் கொரேனாத் தொற்றாளர்களின் வீழ்ச்சியும் புதிய நம்பிக்கைகளை வழங்கி உள்ளது. கடந்த 24 மணிநேரத்திற்குள் 65 பேர் கொரோனாவால் சாவடைந்துள்ளனர். இதனால் பிரான்சில் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 110.202 ஆக அதிகரித்துள்ளது.


கடந்த 24 மணிநேரத்திற்குள் 5.557 பேரிற்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றாளரர்களின் எண்ணிக்கை 5.725.492 ஆக உயர்ந்துள்ளது.
வைத்தியசாலைகளில் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை 83.773 (+65 ) ஆக அதிகரித்துள்ளது. முதியோர் இல்லங்களில் 26.429 பேர் சாவடைந்துள்ளனர். 113.526 பேர் கொரோனாவால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிரசிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.326 ஆக உள்ளது.