⚫🇫🇷பிரான்ஸ் கொரோனா நிலவரம்! அரசாங்க அறிவிப்பு!

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தொற்று, சாவு மற்றும் மருத்துவமனை நிலவரங்கள் பொது சுகாதார துறையினால் வெளியிடப்பட்டுள்ளன.
ஞாயிற்றுக்கிழமை பல ஆய்வுகூடங்கள் மூடப்படுவதால் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவாக பதிவாகியுள்ளது.

5, 266 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று தொடர்ந்தும் 4,7% வீதமாக இருக்க, இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7, 420, 237 பேராக அதிகரித்துள்ளது. கடந்த 7 நாட்களில் 3, 502 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 94 பேர் இந்த 24 மணிநேரத்தில் சாவடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை 118, 555 பேர் சாவடைந்துள்ளனர்.

இவர்களில் 91, 658 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி சாவடைந்தவர்களாவர்.
பிரான்சில் இதுவரை 51, 716, 376 பேர் தங்களது முதலாவது தடுப்பூசியினையும், 50, 542, 612 பேர் தங்களது இரண்டாவது தடுப்பூசியினையும் போட்டுக்கொண்டுள்ளனர்.