⚫🇫🇷பிரான்ஸின் கொரோனா நிலவரம்! வெளியான முக்கிய அறிக்கை!

கடந்த 24 மணிநேரத்தில் பதிவான தொற்று மற்றும் சாவு விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
22,319 பேருக்கு புதிதாக தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையை ந் அடிப்படையில் தொற்று 3.3.% வீதமாக உள்ளது.

இதுவரை 6,579,675 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 887 பேர் கடந்த 24 மணிநேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக தற்போது 10,515 பேர் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் 2,091 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 83 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர்.

இதனால் மொத்த சாவு எண்ணிக்கை 113,264 பேராக அதிகரித்துள்ளது. இவர்களில் 86,689 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர்.