⚫🇫🇷பிரான்ஸ் காவல்துறைக்கு கொரோனா தொற்று! வெளியான அதிர்ச்சி தகவல்!

பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள காவல்நிலையம் ஒன்றில் பணிபுரியும் 20 காவல்துறையினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் உடனடியாகத் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த வேறுசில அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடனடியாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

மேலும் குறித்த காவல்நிலையம் உடனடியாக சுத்தம் செய்யப்பட்டு, தொற்று நீக்கமும் செய்யப்பட்டது. இங்கு 300 வரையான காவல்துறையினர் பணியாற்றி வருகிறார்கள். இந்தத் தகவல்களை l’Agence régionale de Santé உறுதி செய்துள்ளது.