⚫🇫🇷பிரான்ஸ் மாவட்டம் ஒன்றிற்கு விடுக்கப்பட்டுள்ள செம்மஞ்சள் எச்சரிக்கை!

இன்று செவ்வாய்க்கிழமை Aude மாவட்டத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Météo France வெளியிட்ட தகவல்களின் படி, இன்று செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் நாளை புதன்கிழமை மாலை வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இங்கு பலத்த மழை பொழியும் எனவும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்று இரவு 10 மணிக்கு ஆரம்பிக்கும் மழை தொடர்ச்சியாக நாளை மாலை 4 மணிவரை கொட்டித்தீர்க்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில் குறித்த மாவட்டம் செம்மஞ்சள் எச்சரிக்கைக்குள் இருக்கும் எனவும், 80 மில்லிலீட்டரில் இருந்து 150 மில்லி லீட்டர் வரை மழை பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, Hérault, Ariège, Pyrénées-Orientales மற்றும் Andorra ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.