🔴🇫🇷பிரான்ஸ் இளம் பெண் கடத்தல்! வெளியான முக்கிய தகவல்!

இளம் பெண் கடத்தல் விவகாரம் ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் Nantes (Loire-Atlantique) நகரில் புறநகரான Saint-Herblain எனும் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. கடந்த மே 19 ஆம் திகதி புதன்கிழமை அன்று, 19 வயதுடைய இளம் பெண் ஒருவர் வலுக்கட்டாயமாக மகிழுந்து ஒன்றுக்குள் ஏற்றப்பட்டுள்ளார். பின்னர் இளம் பெண்ணை கடத்திக்கொண்டு மகிழுந்து அங்கிருந்து தப்பிச் சென்றது.
இதை நேரில் பார்த்த ஒருவர் மகிழுந்தின் இலக்கத்தகடு விபரங்களுடன் காவல்துறையினரை அழைத்துள்ளார். பின்னர் விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர், அதே பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரை கைது செய்தனர். தாய் மற்றும் அவரது இரண்டு ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் என மொத்தம் ஐவர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணைகளின் பின்னரே, கடத்தப்பட்ட இளம் பெண்ணும் அதே குடும்பத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. ‘இவர் எங்கள் மகள், வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அவரை அழைத்து வருவது எங்கள் உரிமை!’ என குடும்பத்தினர் தெரிவிக்க, ‘என்னால் இக்குடும்பத்தில் இருக்க முடியாது. நான் வெளியே செல்ல உரிமை உண்டு!’ என இளம் பெண் தெரிவிக்க, இந்த வழக்கு மே 28 ஆம் திகதி நீதிமன்றத்துக்கு வந்தது.
அவர்களுக்கு தண்டனை எதுவும் விதிக்கப்படவில்லை என்றபோதும், 19 வயது மகள் வெளியே செல்ல உரிமை உண்டு, நீங்கள் தடுக்க முடியாது என அறிவுறுத்தப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.