⚫🇫🇷இல் து பிரான்ஸில் 45.000 வீடுகள் இருளில்! வெளியான காரணம்!

மேற்கு இல் து பிரான்சில் 45.000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை காலை முதல் இந்த மின்சார தடை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக Hauts-de-Seine மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. மின் இணைப்பு பகுதிகளில் ஏற்பட்ட பழுதின் காரணமாக இந்த தடை ஏற்பட்டுள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

திருத்தப்பணிகள் மிக விரைவாக இடம்பெற்று வருகின்றதாக அறியமுடிகிறது. இன்று மாலை வரையான நிலவரப்படி, பெருமளவான வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், 10.000 வரையான வீடுகள் தொடருந்தும் இருளில் மூழகியுள்ளதாகவும் அறிய முடிகிறது.