♦️🇫🇷ஜேர்மனியின் அதிரடி அறிவிப்பு! மகிழ்ச்சியில் பிரான்ஸ் மக்கள்!

பிரான்சை அதிகூடிய தொற்று வலையமாக (zones à risque) அறிவித்திருந்த ஜெர்மனி தற்போது அதனை நீக்குகின்றது. நாளை, ஜூன் 20 ஆம் திகதி நள்ளிரவில் இருந்து இந்த ‘நீக்கம்’ நடைமுறைக்கு வருகின்றது. இங்கிருந்து ஜெர்மனி செல்பவர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருந்த நிலையில், நாளை முதல் அது கட்டாயம் இல்லை எனவும், கொரோனா எதிர்மறையுடன் கூடிய PCR முடிவுகள் இருந்தாலே போதும் எனவும் அறிவித்துள்ளது. பிரான்சில் தொற்று வீதம் நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருகின்றது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 1,740 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 50 பேர் சாவடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.