🔴🇫🇷🚖🚕வாகனங்களால் நிரம்பி வழியும் இல் து பிரான்ஸ் வீதிகள்!

இன்று இல் து பிரான்சுக்குள் எதிர்பாராத போக்குவரத்து நெரிசல் பதிவானது. இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் ஒரு மாத கால உள்ளிருப்பு நடைமுறைக்கு வருகின்றது. இந்த உள்ளிருப்பு ஆரம்பிப்பதற்கு இன்னும் சில மணிநேரங்களே உள்ள நிலையில், இல் து பிரான்சின் நெடுஞ்சாலைகள் நிரம்பி வழிகின்றன.

வீதி கண்காணிப்பாளர்களான Sytadin நிறுவனம் வெளியிட்ட தகவல்களின் படி மாலை 5 மணி அளவில் 400 கிலோமீற்றர் தூரம் போக்குவரத்து நெரிசல் பதிவானது. இது ஒரு அசாதாரண போக்குவரத்து நெரிசல் நிகழ்வாகும். முன்னதாக கடந்த ஒக்டோபர் மாதம் உள்ளிருப்பு அறிவிக்கப்பட்டிருந்தபோது, அன்றைய நாள் 734 கிலோமீற்றர் தூரம் போக்குவரத்து நெரிசல் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.