🇫🇷💉பிரான்ஸ் கொரோனா தடுப்பூசிகள்! இன்றைய நிலவரம்!

கொரோனா வைரசினால் தொற்றுக்குள்ளானவர்கள், சாவடைந்தவர்களின் விபரங்கள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்ட நிலையில், தடுப்பு மருந்து போடப்பட்டவர்களின் விபரங்களும் வெளியாகியுள்ளன. தற்போதுவரை அதிக பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்ட மாகாணமாக இல் து பிரான்ஸ் உள்ளது. இங்கு டிசம்பர் 26 ஆம் திகதியில் இருந்து இதுவரை 50,881 பேருக்கு இதுவரை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் இன்று மட்டும் கிட்டத்தட்ட 10.000 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அதேவேளை, நாடு முழுவதும் 247,167 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இதுவரை மருத்துவமனையிலும், முதியோர் இல்லங்களிலும் உள்ளவர்களுக்கு மாத்திரமே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள நிலையில், வரும் திங்கட்கிழமை முதல் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசிகள் போட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.