⚫🇫🇷பிரான்ஸில் இன்றிலிருந்து கடுமையான சோதனைகள்!

பாடசாலை விடுமுறைகள் 15 நாட்களிற்கு முன்னதாக, கொரேனாப் பரவலைத் தடுப்பதற்காக விடப்பட்டிருக்கும் நிலையில், காவற்துறையினரின் சோதனைகன் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உள்ளிருப்பு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மாகாணங்களிற்கிடையிலான போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டு, மிகவும் அத்தியாவசியக் காரணங்களிற்காக மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இன்றிலிருந்து மீண்டும், தொடருந்து நிலையங்கள், விமானநிலையங்கள், நெடுஞ்சாலைக் கட்டணச் சாவடிகளில் கடுமையான கட்டுப்பாட்டுச் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் தெரிவத்துள்ளார்.