♦️🇫🇷பிரான்ஸ் சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள சிக்கல்! நெருக்கடியில் அரசு!

சிறைக்கைதிகளின் எண்ணிக்கை கடந்த மே மாதத்தில் திடீரென அதிகரித்துள்ளது. இவ்வருடத்தின் மே மாதம் 1 ஆம் திகதி 65.384 சிறைக்கைதிகள் பிரெஞ்சு சிறைச்சாலைகளில் சிறைவைக்கப்பட்டிருந்தனர். பின்னர் இந்த எண்ணிக்கை இம்மாதம் (ஜூன் 1 ஆம் திகதி) 66.591 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை பிரெஞ்சு சிறைகளின் கொள்ளளவை விட அதிகமாகும். 109.5% வீதம் அதிகதிகள் தற்போது சிறைவைக்கப்பட்டுள்ளனர்.
ஒரே மாதத்தில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 1.8% வீதத்தால் அதிகரித்துள்ளது.

அதேவேளை, கடந்த ஒரு வருடத்தில் 14.6% வீதத்தால் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கைதிகளின் திடீர் அதிகரிப்பால், சிறைச்சாலைகளில் சில நெருக்கடிகல் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக கடந்த ஒரு மாதத்தில் 908 கைதிகளின் படுக்கை மெத்தைகள் தரையில் போடப்பட்டு அகதிகள் உறங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரியில் இருந்து இதுபோன்ற நெருக்கடிகளை தொடர்ந்து பிரெஞ்சு சிறைச்சாலைகள் சந்தித்து வருகின்றன. அதன்போது, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் (la Cour européenne des droits de l’Homme (CEDH) ) இதற்கு கண்டனம் வெளியிட்டிருந்தது. ஆனாலும் நிலமைகளில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. மாறாக நிலமை இன்னும் மோசமாகிக்கொண்டே செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.