🔴 🇩🇪 🇫🇷 பிரான்சை தனிமை படுத்தியது ஜெர்மனி….!!!

பிரான்சை அதிகூடிய தொற்று வலையமாக ஜெர்மனி அறிவித்துள்ளது நேற்று வியாழக்கிழமை இந்த அறிவித்தலை ஜெர்மனியின் தலைவர் ஆங்கீலா மேர்கல் அறிவித்துள்ளார்.

பிரான்சில் கொரோனா தொற்று சராசரியாக ஒவ்வொரு 100.000 பேருக்கு 325.4 பேராக இருக்கின்றது ஆனால் ஜெர்மனியில் மூன்று மடங்கு குறைவாக தேசிய அளவில் ஒவ்வொரு 100.000 பேருக்கும் 113 பேராக மாத்திரமே உள்ளது இதனால் பிரான்சை அதிகூடிய தொற்று வலையமாக ஜெர்மனி பிரகடனப்படுத்திய்யுள்ளது.

இதனால் பிரான்சில் இருந்து ஜெர்மனிக்கு செல்வோருக்கு அங்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்க வேண்டும் அதன் முடிவு எதிர்மறையாக இருக்கவேண்டும் மேலும் அங்கு செல்வோர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது