⚫🇫🇷💉பிரான்ஸ் ஜனாதிபதியின் புதிய திட்டம்!

75 வயதிற்கு மேற்பட்டவர்களிற்குப் பிரத்தியேகத் தொலைபேசி இலக்கம் ஒன்றை வெளியிட உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். எதிர்வரும் 27ம் திகதியிலிருந்து 70 வயதுடையவர்களிற்கான கொரோனாத் தடுப்பூசிகள் போடும் திட்டத்தினை ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில், 75 வயதிற்கு மேற்படப்டவர்கள் பலரிற்கே இன்னமும் தடுப்பூசிகள் போடப்படவில்லை.

இதனால் இன்னமும் கொரோனாத் தடுப்பூசிகள் போடமுடியாமல் உள்ள 75 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கென பிரத்தியேகத் தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிவிக்க உள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 70 வயதுடையவர்களிற்குத் தடுப்பூசிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்னமும் பல்லாயிரக்கணக்கான 75 வயதிற்கு மேற்பட்டவர்களே, கொரோனாத் தடுப்பு ஊசிகள் போடாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.