⚫🇫🇷பிரான்ஸ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இது கட்டாயமாம்!

நாளை மறுநாள் ஜூலை 14, தேசிய நாள் நிகழ்வுகளை காண pass sanitaire கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சோம்ப்ஸ்-எலிசேயில் இடம்பெறும் இராணுவ அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் பார்வையாளர்களாக கலந்துகொள்ள முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சுகாதார அனுமதி பாஸ் (pass sanitaire) உள்ளவர்கள் மாத்திரமே கலந்துகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


pass sanitaire இல்லாதவர்கள், கொரோனா எதிர்மறை முடிவுகளுடன் கூடிய PCR அறிக்கைகளை காண்பித்தும் பார்வையிடலாம். மேற்படி கட்டுப்பாடுகளை சிறப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினர் மற்றும் ஜொந்தாமினர் கண்காணிப்பார்கள் என பரிஸ் காவல்துறை தலைமைச் செயலகம் இன்று அறிவித்துள்ளது.