🔘🇫🇷பிரான்ஸில் கட்டாய தடுப்பூசி! உள்துறை அமைச்சரின் புதிய திட்டம்!

வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் 90% வீதமான காவல்துறையினர் தங்களுக்கான தடுப்பூசியினை பெற்றுக்கொண்டிருப்பார்கள் என உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.


இன்று செவ்வாய்க்கிழமை உள்துறை அமைச்சர் Gérald Darmanin இதனை அறிவித்துள்ளார். ஏற்கனவே 70% வீதமான காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கான இரட்டை தடுப்பூசிகளையும் போட்டுக்கொண்டுள்ளனர். இந்நிலையில் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் 90% வீதமான காவல்துறையினர் தடுப்பூசிகளை நிறைவு செய்வார்கள் என அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நான் தொழிற்சங்கத்திடம் ஏற்கனவே தெரிவித்துள்ளேன்.

நாம் அதிகளவில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாவிட்டால், உதாரணத்திற்கு 90% வீதமானவர்கள்…. தடுப்பூசி போடுவதை கட்டாயமாக்குவேன்!” என அவர் உறுதியாக தெரிவித்தார்.