⚫🇫🇷பிரான்ஸில் புதிய கட்டுப்பாடுகள்! வெளிவந்த முக்கிய தகவல்!

இன்று புதன்கிழமை அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றதை அடுத்து, ஊடக பேச்சாளர் Gabriel Attal சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
200 பேரில் ஒருவருக்கு தொற்று!
‘பிரான்சில் ஒவ்வொரு 200 பேருக்கும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றனர்.’ என தெரிவித்த Gabriel Attal, நேற்றைய தினம் 73.000 பேருக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டது. நாடாளாவிய ரீதியில் ஒவ்வொரு 100.000 பேருக்கும் 500 பேருக்கு தொற்று ஏற்படுகின்றது!’ எனவும் தெரிவித்தார்.
**
ஒமிக்ரோன் தீவிரம்!

‘கடந்த வாரத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 10% வீதமானவர்களுக்கு ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டிருந்தது. இவ்வாரத்தில் 20% வீதமாக அதிகரித்துள்ளது. அடுத்த சில நாட்களில் இரண்டு அல்லது மூன்று மடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது!’ எனவும் தெரிவித்தார்.
**
சுயபரிசோதனை!

‘இந்த விடுமுறை நாட்களில் உங்களை நீங்களே சுய கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுங்கள். ஒரு பொறுப்புள்ள குடிமகனாக உங்கள் அன்புக்குரியவரை நீங்களே பாதுகாத்து கொள்ளுங்கள்!’ எனவும் தெரிவித்தார்.
**

தடுப்பூசி அட்டை!

புதிய ஆண்டில் இருந்து தடுப்பூசி அட்டை மிக அவசியமான ஒன்றாக மாறுகின்றது. ‘இன்று 10% வீதத்துக்கும் குறைவானவர்களே தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போடவில்லை. இந்த தரவுகளே ஆபத்தை வெளிக்காட்டுகின்றது.’ எனவும் Gabriel Attal தெரிவித்தார்.
**

புதிய கட்டுப்பாடு!

‘கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ளது. மேலதிக இறுக்கமான கட்டுப்பாடுகள் அவசியமானால், நாம் அதை நடைமுறைக்கு கொண்டுவருவது தொடர்பாக கவனம் செலுதுகின்றோம்!’
‘வரும் திங்கட்கிழமை இடம்பெற உள்ள் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பாக கலந்தாலோசிக்கப்படும்!’ எனவும் Gabriel Attal தெரிவித்தார்.