⚫🇫🇷பிரான்ஸில் அமுலாகும் புதிய கட்டுப்பாடுகள்! மீறினால் ஒரு வருட சிறை!

உணவகங்கள், கஃபேக்களுக்கு புதிய நிபந்தனை ஒன்றை விதிக்கும் மசோதா ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. உணவகங்கள், கஃபேக்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சுகாதார பாஸ் (pass sanitaire) கட்டாயம் உள்ளதா என அதன் ஊழியர்கள் பரிசோதிக்க வேண்டும். அவர்கள் புதிய நிபந்தனைக்கு உட்பட்டவர்களை, pass sanitaire உள்ளவர்களை மாத்திரமே உணவகத்திற்குள் அனுமதிக்க வேண்டும். இதனை மீறுவோருக்கு €45.000 யூரோக்கள் தண்டப்பணமும், ஒருவருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட வேண்டும் என இந்த புதிய மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வரும் ஜூலை 19 ஆம் திகதி இடம்பெற உள்ள ‘பாதுகாப்பு கவுன்சில்’ அமர்வில் இந்த மசோதா சமர்ப்பிக்கப்பட உள்ளது.

பின்னர் இரு நாட்கள் கழித்து ஜூலை 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இந்த புதிய நிபந்தனை அல்லது சட்டம் ஓகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய நிபந்தனை, சினிமா அரங்குகள், நாடக அரங்குகள் உள்ளிட்ட இடங்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.