⚫🇫🇷பிரான்ஸ் கொரோனாவின் ஆபத்தான ஆரம்பம்! தீவிர சிகிச்சையில் கைக் குழந்தை!

தற்போதைய நிலைமையில் பல இளம் வயதினர் கொரோனத் தொற்றினால் தீவிர சிகிச்சையிலும், வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதிர்ச்சி தரும் விமதாக கைக்குழந்தைகள் கொரோனத் தொற்றினால் அனுமதிக்கப்படும் ஆபத்து உருவாகி உள்ளது. நீஸ் நகரத்தின் (Nice – Alpes-Maritimes) Lenval வைத்தியசாலையில் இதுவரை பத்துக் கைக்குழந்தைகள் கொரோனாத் தொற்றின் தீவிரத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது மிகவும் ஆபத்தான ஆரம்பம் என அவரசசிகிச்சைகள் பிரிவின் துணைத் தலைவர் Philippe Babe எச்சரித்துள்ளார்.
பிறந்து இரண்டு மூன்று மாதங்கள் கூட ஆகாத குழந்தைகள் கடுமையான காய்ச்லுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களிற்குக் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பிறந்து 15 நாட்களான குழந்தைளும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் இவர்களின் பெற்றோர்களிற்கும் கொரோனாத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.