⚫🇫🇷பிரான்ஸ் சிறைச்சாலையிலிருந்து தப்பிய கைதி!

சிறைச்சாலை அதிகாரி ஒருவரை தாக்கிவிட்டு கைதி ஒருவன் தப்பியோடியுள்ளான். நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Osny தடுப்புச் சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவன் மனநல சிகிச்சைகளுக்காக Pontoise மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தான்.

அதன்போது வாகன தரிப்பிடத்தில் வைத்து அவன் தப்பி ஓடியுள்ளான். கைதிக்கு காவலாக வந்த அதிகாரியின் துப்பாக்கியை பறித்து அவரை நோக்கி சுட்டுவிட்டு அவன் தப்பி ஓடியுள்ளதாக அறிய முடிகிறது. ஆனால் குண்டு துளைக்காத மேலாடை அணிந்திருந்ததால் அதிகாரி உயிர்பிழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தப்பியோடிய கைதி தேடப்பட்டு வருகின்றான்.