🇫🇷பிரான்ஸில் பெண் காவல்துறை அதிகாரி அதிரடி கைது!😳 வெளியான அதிர்ச்சி காரணம்!

பரிசில் பெண் காவல்துறை அதிகாரி உட்பட நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வழிப்பறி/ கொள்ளையில் ஈடுபட்ட குற்றத்துக்காக இந்த நான்கு பெண்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான நால்வரில் ஒருவர் காவல்துறை அதிகாரி என அறிய முடிகிறது. இவர்கள் பரிஸ் 18 இன் rue de évangile வீதியில் உள்ள வெதுப்பகம் (boulangerie) ஒன்றில் கொள்ளையிட்டுள்ளனர். நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை மாலை 7 மணி அளவில் அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான பெண் காவல்துறை அதிகாரி, 15 ஆம் வட்டாரத்தில் பணிபுரிகின்றார் எனவும், அவர் adjointe de sécurité (ADS) பிரிவைச் சேர்ந்த 22 வயதுடையவர் எனவும் அறிய முடிகிறது.