🔴🇫🇷😳பிரான்ஸில் அதிரடியாக மூடப்பட்ட உணவகங்கள்! வெளியான காரணம்!

பரிரிசில் சுகாதார மீறல் காரணமாக பல்வேறு உணவகங்கள் மூடப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து இதுவரை 46 உணவகங்கள் பரிசில் மூடப்பட்டுள்ளன. கடந்தவார இறுதியிலும் பல உணவகங்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்ட காரணத்தினால் மூடப்பட்டுள்ளது.

ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து இதுவரை மொத்தமாக 127 கடைகளும் மூடப்பட்டுள்ளன.

நாள் ஒன்றுக்கு பரிசில் 300 இல் இருந்து 400 வரையான உணவகங்கள், தேநீர் விடுதிகள், மதுச்சாலைகள் போன்றவை சோதனையிடப்பட்டு வருகின்றன.

டிசம்பர் 15 ஆம் திகதியில் இருந்து 1.9 மில்லியன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 177,000 கடை உரிமையாளர்களுக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் Gérard Darmanin கடந்த நான்காம் திகதி அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.