⚫🇫🇷பிரான்ஸில் முன்னாள் காதலியால் காவல்துறையிடம் சிக்கிய காதலன்!

கடத்தல்காரன் ஒருவன் தனது முன்னாள் காதலிக்கு கொலை மிரட்டல் விடுத்ததால், காவல்துறையினரிடம் சிக்கிக்கொண்டுள்ளான். கடந்த செவ்வாய்க்கிழமை இச்சம்பவம் Chilly-Mazarin (Essonne) நகரில் இடம்பெற்றுள்ளது. 32 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வந்திருந்தார், இந்நிலையில், அவர் தனது முன்னாள் காதலி ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்திருந்தார். இதனால் அப்பெண் காவல்துறையினரை அழைத்து ”முன்னாள் காதலன் அச்சுறுத்துவதாக’ புகார் அளித்துள்ளார்.

அதை அடுத்து காவல்துறையினர், குறித்த நபரின் வீட்டுக்கு அதிகாலையில் சென்று அவரை சோதனையிட்டதோடு, கைதும் செய்தனர். அத்தோடு அவரது வீடும் சோதனையிடப்பட்டது. அதன்போது அவர் 6.9 கிலோ எடையுள்ள கஞ்சா போதைப்பொருளும், 18.670 ரொக்கப்பணம் மறைத்து வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.