🔴🇫🇷பிரான்ஸில் கத்திக்குத்து தாக்குதல்!

Seine-Saint-Denis மாவட்டத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில், 22 வயதுடைய இளைஞன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். வியாழக்கிழமை மாலை 93-இன் Tremblay-en-France நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இளைஞன் தனது நண்பர்களுடன் மகிழுந்தில் பயணித்துக்கொண்டிருந்தனர். மகிழுந்து Rue Paul-Langevin வீதியில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, மற்றுமொரு மகிழுந்து வந்து இவர்களுடன் மோதியது.

விபத்தை அடுத்து, எதிர் மகிழுந்தில் இருந்து இறங்கிய ஒருவன், குறித்த 22 வயதுடைய இளைஞனை தாக்கி, கத்தியாலும் சரமாரியாக குத்தியுள்ளான்.
சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வந்தடைந்தபோது நிலமை கைமீறிச் சென்றிருந்தது.

தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளான்.
காப்பாற்ற முற்பட்ட அவனுடைய நண்பன் ஒருவனுக்கும் கத்திக்குத்து இடம்பெற்றதாக அறிய முடிகிறது. காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.