⚫🇫🇷பிரான்ஸ் காவல்துறையின் அதிரடி!

கொள்ளையர்கள் மீது காவல்துறையினர் ஐந்து தடவைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.
நேற்று நள்ளிரவின் பின்னர் அதிகாலை 2.40 மணி அளவில் Pecq (Yvelines) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. rue Albert-Priolet (Saint-Germain-en-Laye) வீதியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றை உடைத்த கொள்ளையர்கள் சிலர், அதற்குள் இருந்த மோட்டார் சைக்கிள்களை வாகனம் ஒன்றுக்குள் ஏற்றினார்கள். இச்சம்பவத்தை பார்த்த பெண்மணி ஒருவர் தனது தொலைபேசியில் அக்காட்சியினை படம் பிடித்ததோடு, காவல்துறையினரையும் அழைத்துள்ளார்.

ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துள்ளனர். ஆனால் அதற்குள்ளாக கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
காவல்துறையினர் கொள்ளையர்களை துரத்திச் சென்றனர். வாகனத்தை நிறுத்தும்படி பணித்த காவல்துறையினர், கொள்ளையர்களின் வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இறுதியாக கொள்ளையர்களை Charles-de-Gaulle ( Pecq) நகரில் வைத்து மடக்கி பிடித்தனர். சாரதி வாகனத்தை விட்டு இறங்க மறுத்துள்ளார். அத்தோடு வாகனத்தால் காவல்துறையினரின் மகிழுந்தையும் மோதி தள்ளியுள்ளனர். இதனால் காவல்துறையினர் மீண்டும் கொள்ளையர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இறுதியில் இரு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.